புது டில்லி: உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ்ஸை ஆபத்தானது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ள நிலையில், அதனை நிரூபிக்க இதுவரை எந்தவொரு தரவுகளும் இல்லை என பிரபல வைரலாஜிஸ்டும், ராயல் சொசைட்டி ஆப் லண்டனின் முதல் இந்திய பெண் உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.